செய்திகள்

திருப்புல்லாணி ஒன்றியத்தில் டேங்கர் லாரிகளில் குடிநீர் வினியோகம்- அமைச்சர் தொடங்கி வைத்தார்

Published On 2019-06-24 12:37 GMT   |   Update On 2019-06-24 12:37 GMT
திருப்புல்லாணி ஒன்றியத்தில் குடிநீர் வடிகால் வாரிய லாரிகளில் குடிநீர் வழங்கும் பணியை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் தொடங்கி வைத்தார்.

ராமநாதபுரம்:

திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் தில்லையேந்தல் ஊராட்சிக்குட்பட்ட பள்ள மோர்குளம் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே அங்கு வசிக்கும் மக்களுக்கு குடிநீர் வடிகால் வாரிய லாரிகளில் குடிநீர் வழங்கும் பணியை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கலெக்டர் வீரராக வராவ் கலந்து கொண்டார்.

குடிநீர் வழங்கும் பணியை தொடங்கி வைத்த பின்னர் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் கூறியதாவது:-

தமிழ்நாடு அரசு தற்போது நிலவி வரும் வறட்சியான சூழ்நிலையால் பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் பாதுகாத்திடும் விதமாக போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் குடிநீர் வழங்கிட இயலாத குடியிருப்புகளுக்கு டேங்கர் லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்திட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது நாளொன்றிற்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் சராசரியாக35 எம்.எல்.டி அளவிலும், ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் ஊரக குடிநீர் திட்டத்தின் கீழ் 6.5 எம்.எல்.டி அளவிலும், உள்ளூர் குடிநீர் ஆதாரங்கள் மூலம் 40 எம்.எல்.டி அளவிலும் என பொதுமக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.

மேலும் முதல்- அமைச்சர் உத்தரவின் படி, மாவட்டத்தில் குடிநீர் விநியோகம் செய்ய இயலாத கிராமப்பகுதிகளுக்கு டேங்கர் லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்திட ஏதுவாக ரூபாய் 60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளது.

குறிப்பாக ராமநாதபுரம், திருப்புல் லாணி, நயினார் கோவில், பரமக்குடி, கடலாடி, கமுதி மற்றும் முதுகுளத்தூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 45 ஊரக குடியிருப்பு பகுதிகளுக்கு டேங்கர் லாரி மூலம் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை வீதம் குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட உள்ளது.

மேற்கண்டவாறு அவர் கூறினார்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் அயினான், உதவி செயற்பொறியாளர்கள் திருச்சி சண்முகநாதன் ஜவகர் கென்னடி, உதவி பொறியாளர்கள் முத்து கிருஷ்ணன், சுவடு பாலசுப்பிரமணியன், திருப்புல்லாணி ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் முனியாண்டி, கீழக்கரை நகர் செயலாளர் ஜகுபர் உசேன், மாயாகுளளம் ஊராட்சி அ.தி.மு.க. செய லாளர் பாக்கியநாதன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சரஸ்வதி பாக்கியநாதன், மற்றும் அரசு அதிகாரிகள் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News