செய்திகள்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் இடியுடன் கூடிய மழை - மக்கள் மகிழ்ச்சி

Published On 2019-06-22 14:04 GMT   |   Update On 2019-06-22 14:04 GMT
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
சென்னை:

சென்னையில் அக்னி நட்சத்திரம் முடிந்த நிலையிலும் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. அவசியமான காரணங்கள் இன்றி வெளியில் நடமாட வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
 
இதற்கிடையே, நேற்று முன்தினம் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இந்த மழையால் அந்தந்தப் பகுதிகள் குளிர்ந்தன. பல்வேறு பகுதிகளில் மழை பெய்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில்,  சென்னையின் புறநகர் பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், வடபழனி, மீனம்பாக்கம், வேளச்சேரி, அமைந்தகரை , மேடவாக்கம், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, கேளம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் பலத்த இடியுடன் மழை பெய்து வருகிறது.

காஞ்சிபுரம், தாம்பரம் சாலை, செங்கல்பட்டு சாலை, வாலாஜாபாத் குன்றத்தூர், திருமுடிவாக்கம், மாங்காடு உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. 

திருவண்ணாமலை, வந்தவாசி, பொன்னூர், இளங்காடு செம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. திருவள்ளூர், திருத்தணி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

வேலூரில் அரக்கோணம், சோளிங்கர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மழை பெய்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Tags:    

Similar News