செய்திகள்

காங்கிரஸ் யார் மீதாவது சவாரி செய்வதே வழக்கம்- அமைச்சர் ஜெயக்குமார் தாக்கு

Published On 2019-06-22 05:56 GMT   |   Update On 2019-06-22 09:14 GMT
காங்கிரஸ், சிந்துபாத் போல யார் மீதாவது ஏறி சவாரி செய்வதே வழக்கமாகிவிட்டது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
சென்னை:

சென்னையில் இன்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் இன்று யாகம் நடத்தப்படுகிறது. நிச்சயமாக மழை பொழியும் என்ற நம்பிக்கை உள்ளது. 6 கோடி மரம் இருந்தால் சுற்றுச்சூழல் நமக்கு சாதகமாக மாறி மழை பொழியும், யாகம் நடத்துவதோடு மட்டுமல்லாமல் மரம் நட வேண்டும்.

ஜெயலலிதா கொண்டுவந்த மழை நீர்சேமிப்பு திட்டத்தின் முக்கியத்துவம் இப்போது புரிகிறது. மழைநீர் திட்டத்தை விரிவுபடுத்த அதனை கட்டாயப்படுத்துவோம்.


ஜெயலலிதா வீராணம் திட்டத்தை கொண்டு வந்ததால் குடிநீர் பிரச்சனை சமாளிக்க முடிகிறது.

ஒவ்வொருவரும் மரம் நட்டால் தமிழகத்தில் நிச்சயம் நல்ல மழை பெய்யும். ஒவ்வொருவரும் ஒரு மரம் நட்டால் நூறு பேருக்கு ஆக்ஸிஜன் கிடைக்கும். எங்களுக்கு எதிராக யார் கல் வீசினாலும் அது அவர்கள் மீதுதான் விழும்.

சசிகலா - தினகரனை தவிர யார் வந்தாலும் அ.தி.மு.க.வில் சேர்த்துக் கொள்வோம். தங்க தமிழ்செல்வன் உள்பட யார் வந்தாலும் வரவேற்கிறோம்.

1967-ம் ஆண்டுக்குப் பின் காங்கிரஸ், சிந்துபாத் போல யார் மீதாவது ஏறி சவாரி செய்வதே வழக்கமாகிவிட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News