மெட்ரோ ரெயில் பணிகள் முடிவடைந்ததால் மீண்டும் வடபழனி, அசோக்நகர், கத்திப்பாரா, தாம்பரம் வழியாக வெளியூர் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளியூர் பேருந்துகள் அசோக்நகர், கத்திப்பாரா வழியே செல்லும்
பதிவு: ஜூன் 20, 2019 20:50
சென்னை:
கோயம்பேட்டில் இருந்து வெளியூர் செல்லும் முக்கிய பேருந்துகள் மாநகர சாலை வழியாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் வசதிக்கேற்ப வடபழனி, அசோக்பிநகர், கத்திப்பாரா, தாம்பரம் வழியாக வெளியூர் பேருந்துகள் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரெயில் பணி நடைபெற்றதால் மதுரவாயல் வழியாக வெளியூர் பேருந்துகள் இயக்கப்பட்டன. தற்போது மெட்ரோ ரெயில் பணிகள் முடிவடைந்ததால் மீண்டும் அசோக்நகர், கத்திப்பாரா வழியாக பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும் இரவு 9.30 முதல் காலை 7 மணி வரையிலும் மாநகர் வழியாக இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
Related Tags :