செய்திகள்

களக்காட்டில் தூக்கில் பிணமாக தொங்கிய கட்டிட தொழிலாளி

Published On 2019-06-20 14:00 GMT   |   Update On 2019-06-20 14:00 GMT
உப்பிலாங்குளம் அருகே உள்ள ஒரு தோட்டத்தில் கட்டிட தொழிலாளி மரத்தில் பிணமாக தொங்கினார். அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
களக்காட்டில் தோட்டத்தில் உள்ள மரத்தில் கட்டிட தொழிலாளி பிணமாக தொங்கினார். அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

களக்காடு:

களக்காடு சிங்கம்பத்தில் உப்பிலாங்குளம் கால்வாய் அருகே உள்ள ஒரு தோட்டத்தில் இன்று காலை ஆண் ஒருவர் சடலமாக மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். அவர் சட்டையும், லுங்கியும் அணிந்திருந்தார். இதைப்பார்த்த பொதுமக்கள் களக்காடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். 

இதையடுத்து களக்காடு இன்ஸ்பெக்டர் சபாபதி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் அவர் களக்காடு அருகே உள்ள கல்லடி சிதம்பரபுரம் நல்லநாதபுரத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி அசரப் அலி (வயது 54) என்பது தெரியவந்தது. 

அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது பற்றி போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது இரு சக்கர வாகனத்தில் சாவியும், அவரது செல்போனும் அவர் அணிந்திருந்த சட்டை பையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அசரப் அலிக்கு விமலா என்ற மனைவியும், ஆல்பர்ட் (29) என்ற மகனும் உள்ளனர். 
Tags:    

Similar News