செய்திகள்

உற்பத்தி குறைவால் வெற்றிலை விலை உயர்வு- விவசாயிகள் மகிழ்ச்சி

Published On 2019-06-20 13:47 GMT   |   Update On 2019-06-20 13:47 GMT
கரூர் மாவட்டத்தில் வெற்றிலை உற்பத்தி குறைவின் காரணமாக விலை உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வேலாயுதம்பாளையம்:

கரூர் மாவட்டம், நொய்யல் அருகே புங்கோடை, சேமங்கி, முத்தனூர், கோம்புபாளையம், திருக்காடுதுறை, தவுட்டுப்பாளையம்,  என்.புகழூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளக்கொடி, கற்பூரி போன்ற வெற்றிலை ரகங்களை ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். 

இங்கு விளையும் வெற்றிலைகளை வேலாயுதம்பாளையம் பகுதிகளில் செயல்பட்டு வரும் தனியார் வெற்றிலை மண்டிகளுக்கும், விவசாயிகள் அசோசியேசன் வெற்றிலை மண்டிக்கும் அனுப்பி வைக்கின்றனர். இப்பகுதிகளிலிருந்து தமிழ் நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் லாரிகள் மற்றும் ரெயில்கள் மூலம் அனுப்பி வைக்கின்றனர். 

கடந்த வாரம் இளங்கால் வெள்ளைக் கொடி வெற்றிலை 104 கவுளி கொண்ட ஒரு சுமை ரூ.5 ஆயிரத்திற்கும், முதிகால் வெள்ளக்கொடி வெற்றிலை ரூ.2ஆயிரத்திற் கும் அதேபோல் இளங்கால் கற்பூரி வெற்றிலை ரூ.3,500- க்கும், முதிகால் கற்பூரி வெற்றிலை ரூ.1,500-க்கும் வாங்கி சென்றனர். இந்த வாரம் இளங்கால் வெள்ளைக் கொடி வெற்றிலை 104 கவுளி கொண்ட ஒரு சுமை ரூ.6-ஆயிரத்திற்கும், முதிகால் வெள்ளக்கொடி வெற்றிலை ரூ.2,500-க்கும் அதேபோல் இளங்கால் கற்பூரி வெற்றிலை ரூ.5 ஆயிரத்திற்கும், முதிகால் கற்பூரி வெற்றிலை ரூ.2 ஆயிரத்திற்கும் வாங்கி சென்றனர். வெற்றிலை உற்பத்தி குறைவின் காரணமாக விலை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News