செய்திகள்

அவதூறு வழக்கில் இருந்து வைகோவை விடுவிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

Published On 2019-06-20 08:00 GMT   |   Update On 2019-06-20 08:00 GMT
அவதூறு வழக்கில் இருந்து விடுவிக்க கோரி வைகோ தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சென்னை:

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கடந்த 2006ம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியிருந்தார். அதில் மதிமுகவை உடைக்க திமுக தலைவர் கருணாநிதி (அப்போதைய முதல்வர்) முயற்சி செய்ததாக கூறியிருந்தார். இந்த கடிதத்தின் அடிப்படையில் தமிழக அரசு சார்பில் வைகோ மீது நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.



இந்த வழக்கிற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வைகோ மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், மனுவை நீதிபதி இன்று தள்ளுபடி செய்தார்.

அதேசமயம், பாரதிராஜா அலுவலகம் தாக்கப்பட்டதற்கு கருணாநிதி தான் காரணம் என பேசியது தொடர்பான வழக்கில் இருந்து வைகோ விடுவிக்கப்பட்டார். 
Tags:    

Similar News