செய்திகள்

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்பனை - 3 கடைகளுக்கு அபராதம்

Published On 2019-06-19 17:58 GMT   |   Update On 2019-06-19 17:58 GMT
கோத்தகிரியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்த கடைகளுக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கோத்தகிரி:

கோத்தகிரி நகரில் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் கண்ணன் தலைமையில் ஊழியர்கள் சோதனை மேற்கொண்டனர். கோத்தகிரி டானிங்டன், கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை நடந்தது. அப்போது 3 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்பனைக்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கடை உரிமையாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இது குறித்து சுகாதார ஆய்வாளர் கண்ணன் கூறும்போது, கோத்தகிரி நகரில் பிளாஸ்டிக் குறித்து போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதால் பொதுமக்கள் பெரும்பாலும் துணிப்பையை பயன்படுத்த தொடங்கி உள்ளனர். இறைச்சி கடைகளில் வாழை இலை பயன்படுத்தப்படுகிறது. தற்போது குளிர்பானம், தண்ணீர் ஆகியவை விற்பனை செய்யப்படும் சிறிய பிளாஸ்டிக் பாட்டில்களுக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனவே அவற்றையும் தவிர்த்து பிளாஸ்டிக் தடை உத்தரவை செயல்படுத்த அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், என்றார்.
Tags:    

Similar News