செய்திகள்

புதுவையில் 105.61 டிகிரி வெயில் கொளுத்தியது

Published On 2019-06-18 03:13 GMT   |   Update On 2019-06-18 03:13 GMT
புதுவையில் நேற்று அதிக பட்சமாக 105.61 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவானது. அனல் காற்றும் வீசியது. சாலைகள் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன.
புதுச்சேரி:

புதுவையில் அக்னி நட்சத்திரம் முடிந்த நிலையிலும் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக 102 டிகிரிக்கும் மேலாக வெயிலின் அளவு பதிவாகி வருகிறது. வெயில் சுட்டெரித்து வருவதால் பகலில் வெளியில் தலைகாட்ட முடியாத நிலை இருந்து வருகிறது. இதனால் அலுவலகம் செல்வோரும், பொதுமக்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் வடதமிழகத்தில் அனல் காற்று வீசும், வழக்கத்தை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. புதுவையில் நேற்று அதிக பட்சமாக 105.61 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவானது. அனல் காற்றும் வீசியது. சாலைகள் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன.

சைக்கிளில் வீதி, வீதியாக சென்று பொருட்களை விற்று பிழைப்பு நடத்துபவர்கள் வெயிலிலிருந்து தப்பிக்க தங்கள் சைக்கிளில் பந்தல்போல் அமைத்து சென்றனர். மாலை நேரத்தில்கூட அனல் காற்றை உணர முடிந்தது. மாலை 5 மணிக்கு மேல் தான் வெயிலின் தாக்கம் குறையத்தொடங்கியது. அதனால் மாலையில் கடற்கரை மற்றும் பூங்காக்களுக்கு காற்று வாங்க குவிந்தனர். சிலர் தலைமை செயலகம் எதிரே உள்ள செயற்கை மணல் பரப்பு பகுதியிலும், சிலர் பழைய துறைமுகம் அருகேயும் சென்று கடலில் இறங்கி அலையில் கால்களை நனைத்து விளையாடி மகிழ்ந்தனர்.

Tags:    

Similar News