செய்திகள்
கார்வண்ணபிரபு

நீட் தேர்வில் மாநில அளவில் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் கரூர் மாணவர் முதலிடம்

Published On 2019-06-06 05:35 GMT   |   Update On 2019-06-06 05:35 GMT
நீட் தேர்வில் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் தமிழக அளவில் முதல் இடத்தையும், அகில இந்திய அளவில் 5-வது இடத்தையும் கரூர் மாணவர் பெற்றுள்ளார்.
கரூர்:

இந்திய மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. தமிழகத்தில் 1 லட்சத்து 8 ஆயிரத்து 78 மாணவர்கள் தேர்வு எழுதினர்.

இதில் 59 ஆயிரத்து 785 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இந்த நிலையில் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் தமிழக அளவில் முதல் இடத்தையும், அகில இந்திய அளவில் 5-வது இடத்தையும் கரூர் மாணவர் கார்வண்ண பிரபு பெற்றுள்ளார். இந்த மாணவனின் தந்தை கண்ணன் டாக்டராக உள்ளார்.

நாமக்கல் கிரீன் பார்க் பள்ளியில் பிளஸ்-2 படித்த இந்த மாணவன் 500-க்கு 476 மதிப்பெண் பெற்றிருந்தார். தற்போது நீட் தேர்வில் அகில இந்திய அளவில் சாதனை படைத்துள்ளார்.

இந்த சாதனை குறித்து மாணவர் கார்வண்ண பிரபுவிடம் கேட்டபோது, நீட் தேர்வுக்காக பள்ளியின் சிறப்பு பயிற்சி வகுப்பில் சேர்ந்து படித்தேன். பள்ளி வகுப்பு முடிந்து தினமும் 4 மணி நேரம் இதற்காக செலவிட்டேன். கடந்த 2 வருடங்களாக நீட் பயிற்சி எடுத்தேன். அகில இந்திய அளவில் 700-க்கு 572 மதிப்பெண் பெற்றுள்ளேன். இது மகிழ்ச்சி அளிக்கிறது. தந்தையை போன்று டாக்டராகி மக்களுக்கு சேவை செய்வேன் என்றார்.
Tags:    

Similar News