செய்திகள்

மருத்துவ ஆணையம் அமைப்பதை தமிழக அரசு எதிர்ப்பது ஏன்? - தமிழிசை கேள்வி

Published On 2018-08-01 06:40 GMT   |   Update On 2018-08-01 06:40 GMT
மருத்துவ ஆணையம் அமைப்பதை தமிழக அரசு எதிர்ப்பது ஏன்? என பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். #TamilisaiSoundararajan #Neetexam

சென்னை:

மருத்துவ கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் இன்று தொடங்கியது.

நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே இந்த அண்டு மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது. அவர்களை வரவேற்று வாழ்த்து சொல்லும் வகையில் தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரிக்கு வந்தார்.

வாசலில் நின்று முதலாம் ஆண்டு மாணவ- மாணவிகளுக்கு பூக்கள் கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் அவர் நிரூபர்களிடம் கூறியதாவது:-

நீட் தேர்வின் காரணமாக ஏழை எளியவர்களும், கிராமப்புற மாணவர்களும் தகுதி இருந்தால் மருத்துவராக முடியும் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. வருங் காலத்தில் அவர்களும் தலை சிறந்த மருத்துவர்களாவார்கள்.


அகில இந்திய அளவில் பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளானதால் மருத்துவ கவுன்சிலை மாற்றி அமைத்து அகில இந்திய மருத்துவ ஆணையத்தை மத்திய அரசு அமைக்க இருக்கிறது.

இதற்கு பல மாநிலங்கள் ஒப்புதல் அளித்துவிட்ட நிலையில் தமிழகம் மட்டும் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன் என்று புரியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

செய்தி தொடர்பாளர் ரவிச் சந்திரன், மாவட்ட தலைவர்கள் தனஞ்செயன், ஜெய்சங்கர் ஆகியோர் உடன் இருந்தனர். #TamilisaiSoundararajan #Neetexam

Tags:    

Similar News