செய்திகள்

நன்னிலத்தில் ஓ.என்.ஜி.சி.யை கண்டித்து ஆர்ப்பாட்டம் 20 பேர் கைது

Published On 2017-12-29 09:58 GMT   |   Update On 2017-12-29 09:58 GMT
ஓ.என்.ஜி.சி நிறுவனம் எண்ணெய் எடுக்கும் பணி மேற்கொண்டு வருகிறது. இதனை கண்டித்து மக்கள் அதிகாரம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நன்னிலம்:

நன்னிலத்தை அடுத்துள்ள சலிப்பேரி ஊராட்சி தென்னஞ்சார் மேலவெளியில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் எண்ணெய் எடுக்கும் பணி மேற்கொண்டு வருகிறது. அதனால் நன்னிலம் பகுதியில் விவசாயம் பாதிக்கும் என்பதனை விளக்கும் வகையில் நன்னிலத்தில் பொதுக்கூட்டம் நடத்த மக்கள் அதிகாரம் சார்பில் அனுமதி கோரி இருந்தனர்.

இதற்கு போலீசார் அனுமதி வழங்காததை கண்டித்து நன்னிலம் பஸ் நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மக்கள் அதிகாரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முரளி தலைமை தாங்கினார். தமிழக காவிரி விவசாயம் பாதுகாப்பு சங்க மாநில துணைத்தலைவர் வரதராஜன் சிறப்புரை ஆற்றினார்.

கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்ட அன்புச்செல்வம், திலக், உத்தமன் ஆகிய மூவரையும் எவ்வித வழக்கின்றி விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினர். இதில் கலந்து கொண்ட 200-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

Tags:    

Similar News