செய்திகள்

திருப்பூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி: கலெக்டர் ஆய்வு

Published On 2017-07-06 22:09 IST   |   Update On 2017-07-06 22:09:00 IST
திருப்பூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை பரப்பக்கூடிய கொசு ஒழிப்புப் பணிகளை கலெக்டர் பழனிசாமி, நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம், பல்லடம் நகராட்சி, அவினாசி மற்றும் திருமுருகன் பூண்டி ஆகிய பேரூராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப்பணிகள் மற்றும் டெங்கு காய்ச்சலை பரப்பக்கூடிய கொசு ஒழிப்புப் பணிகளை மாவட்ட கலெக்டர் பழனிசாமி, நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சுகாதாரப் பணியாளர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொது மக்களின் வீடுகளுக்கு நேரில் சென்று சுகாதார விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும்.

பொது மக்கள் குடி நீரினை சேமித்து வைக்கும் பாத்திரங்களை பாதுகாப்பாக மூடி வைக்க வேண்டும், தேங்காய் சிரட்டை, பழைய டயர்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களில் தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். கொசு உற்பத்தியை தடுப்பதன் மூலம் காய்ச்சல் பரவுவதை தடுக்க இயலும்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து, திருமுருகன் பூண்டி பேரூராட்சி, தேவராயம் பாளையம் மற்றும் ராக்கியா பாளையம் ஆகிய பகுதிகளில் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக புதிதாக அமைக்கப் பட்டிருந்த போர் வெல் பணிகளையும், அவினாசி பேரூராட்சி டி.எஸ். சுந்தரம் வீதி மற்றும் பல்லடம் நகராட்சிக்குட்பட்ட கல்லாம் பாளையம் ஆகிய பகுதிகளில் மேற் கொள்ளப்பட்டு வரும் கொசு ஒழிப்பு பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டார்.

பின்னர் கல்லாம்பாளை யத்தில் கட்டப்பட்டு வரும் புதிய அங்கன்வாடி மைய கட்டிடத் தினையும் மற்றும் பல்லடம் நகராட்சி அலுவலகத்தில் ஆதார் பொது சேவை மையத்தினையும் மாவட்ட கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர், ஜெயந்தி, பேரூராட்சிகள் உதவி செயற்பொறியாளர் மனோகரன், பல்லடம் நகராட்சி ஆணையாளர் திரு.ராஜாராம், பேரூராட்சி செயல் அலுவலர்கள் சம்பத்துநாயுடு .சுப்பாராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Similar News