செய்திகள்

பொன்னமராவதி பள்ளியில் அப்துல்கலாம் பிறந்த நாள் விழா

Published On 2016-10-17 19:51 IST   |   Update On 2016-10-17 19:51:00 IST
பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் வலையபட்டி சிதம்பரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிறந்தநாள் விழா நடைபெற்றது.
பொன்னமராவதி:

பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் வலையபட்டி சிதம்பரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிறந்தநாள் விழா நடைபெற்றது. அமல அன்னை மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற விழாவிற்கு பள்ளியின் முதல்வர் மரியபுஷ்பம் தலைமை வகித்தார்.

விழாவில் அப்துல்கலாமின் உருவ படத்திற்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அப்துல்கலாமின் சாதனைகள் விளக்கும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

ஆசிரியர்கள் பிரின்ஸ், பாலமுரளி, சலேத் உள்ளி ட்டோர் பங்கேற்றனர். வலையபட்டி சிதம்பரம் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் அப்துல்கலாம் உருவ படத்திற்கு மலர் தூவி மாணவ, மாணவிகள் மரியாதை செலுத்தினர், பள்ளியின் முதல்வர் முருகேசன், மேலாளர் ராமச்சந்திரன் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

Similar News