செய்திகள்
ஈரோட்டில் இலவச வீட்டுமனை கேட்டு துப்புரவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
ஈரோடு மாவட்டத்தில் இலவச வீட்டுமனை கேட்டு துப்புரவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட உள்ளாட்சிதுறை பணியாளர்கள் சங்கம் சார்பில் துப்புரவு பணியாளர்கள் இன்று ஈரோடு சூரம்பட்டி நால்ரோட்டில் உள்ள தொழிலாளர்கள் நல அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்துக்கு ஏ.ஐ. டி.யூ.சி. தலைவர் சின்னசாமி தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பெரியசாமி, நல்லப்பன் மற்றும் நிர்வாகிகள் சக்திவேல், அப்புசாமி உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
மக்கள் தொகைக்கேற்ப அரசு விதிப்படி துப்புரவு தொழிலாளர்களை நியமிக்க வேண்டும். துப்புரவு தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும், குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும் உள்பட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.