செய்திகள்

அரசு ஆஸ்பத்திரி அருகே மயங்கி கிடந்த மூதாட்டி பலி: போலீசார் விசாரணை

Published On 2016-10-01 16:20 IST   |   Update On 2016-10-01 16:20:00 IST
அரசு ஆஸ்பத்திரி அருகே மயங்கி கிடந்த மூதாட்டி பலியானார். இறந்த மூதாட்டி யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஈரோடு:

ஈரோடு அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள விநாயகர் கோவில் அருகே சுமார் 80 வயது மதிக்கத்தக்க ஒரு மூதாட்டி மயங்கிய நிலையில் கிடந்தார்.

அங்கிருந்தவர்கள் உதவியுடன் அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இறந்த மூதாட்டி யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. அவரது உடல் அரசு ஆஸ்பத்திரி சவகிடங்கில் வைக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து அரசு ஆஸ்பத்திரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News