செய்திகள்
மா. சுப்பிரமணியன்

மு.க. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 15 புதுமுகங்கள்

Update: 2021-05-06 17:28 GMT
முக ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் அவருடன் 34 பேர் இடம் பிடித்துள்ளவர்களில் 15 பேர் புதுமுகங்கள் ஆவார்கள்.
முக ஸ்டாலின் நாளை காலை முதல்வராக பதவி ஏற்க இருக்கிறார். அவரது தலைமையிலான தமிழக மந்திரி சபையில் இடம்பிடித்துள்ளவர், அவர்களுக்கான பொறுப்பு இன்று ஆகியவற்றிற்கான பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. முக ஸ்டாலினுடன் 34 பேர் அமைச்சரவையில் இடம் பிடித்துள்ளனர்.

அவர்களில் 19 பேர் புதிதாக அமைச்சராக பொறுப்பேற்க இருக்கிறார்கள். அவர்கள் விவரம்:-

1. அர. சக்கரபாணி- உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு, விலைக்கட்டுப்பாடு
2. ஆர். காந்தி - கைத்தறி மற்றும் துணிநூல்<
3. மா. சுப்பிரமணியம்- மக்கள் நல்வாழ்வு, மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலன்
4. பி. மூர்த்தி- வணிக வரிகள், பதிவு மற்றும் முத்திரைத்தாள் சட்டம்
5. எஸ்.எஸ். சிவசங்கர் - பிற்படுத்தப்பட்டோர் நலன், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சீர்மரபினர் நலன்
6. பி.கே.சேகர் பாபு- இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை
7. பழனிவேல் தியாகராஜன்- நிதித்துறை திட்டம் மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை
8. சா.மு.நாசர்- பால்வளம் மற்றும் பால் பண்ணை வளர்ச்சி
9. செஞ்சி கே.எஸ்.மஸ்தான்- சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை


10. அன்பில் மகேஷ் பொய்யாமொழி - பள்ளிக் கல்வித் துறை
11. சிவ.வீ. மெய்யநாதன் - சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை
12. சி.வி.கணேசன் - தொழிலாளர் நலன்திறன் மேம்பாட்டுத் துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி
13. த.மனோ தங்கராஜ் - தகவல் தொழில்நுட்பத் துறை
14. மா.மதிவேந்தன் - சுற்றுலா மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துறை
15. என்.கயல்விழி செல்வராஜ்- ஆதிதிராவிடர் நலத்துறை
Tags:    

Similar News