செய்திகள்
மகேந்திரன்-கமல்

மநீம கட்சியில் இருந்து துணை தலைவர் மகேந்திரன் விலகல்

Published On 2021-05-06 13:19 GMT   |   Update On 2021-05-06 13:19 GMT
மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணை தலைவர் மகேந்திரன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
சென்னை:

நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் படுதோல்வியைச் சந்தித்தது. அதனுடன் கூட்டணி அமைத்திருந்த சமத்துவ மக்கள் கட்சி, ஐஜேகே போன்ற கட்சிகளும் படுதோல்வி அடைந்தன.

மநீம தலைவர் கமல்ஹாசன் தான் போட்டியிட்ட கோவை தெற்கு தொகுதியில் நீண்ட இழுபறிக்கிடையே, பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனிடம்  தோல்வியைத் தழுவினார். மேலும், அவருடைய கட்சி சார்பில் போட்டியிட்ட துணை தலைவர் மகேந்திரன், முக்கிய நிர்வாகிகளான சி.கே.குமரவேல், பழ.கருப்பையா, பொன்ராஜ், ஸ்ரீப்ரியா, சிநேகன், சந்தோஷ் பாபு உள்ளிட்டோரும் தோல்வியைச் சந்தித்தனர்.

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணை தலைவர் மகேந்திரன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 

மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து முக்கிய நிர்வாகிகள் சிலர் தங்கள் வகித்த பதவிகளில் இருந்து விலகியுள்ளனர். துணை தலைவர் மகேந்திரன், பொன்ராஜ், பொதுச்செயலாளர் சந்தோஷ் பாபு, சிகே. குமரவேல் மவுரியா ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர் பொதுச்செயலாளர் முருகானந்தம், நிர்வாக குழு உறுப்பினர் உமாதேவி உள்ளிட்டோரும் ராஜினாமா செய்துள்ளனர்.
Tags:    

Similar News