செய்திகள்
எடப்பாடி பழனிசாமியை முன்னாள் அமைச்சர் உதயகுமார் சந்திக்க வந்தபோது எடுத்தபடம்.

சேலம் மாவட்டத்தில் வெற்றி பெற்ற அதிமுக-பாமக எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு

Published On 2021-05-04 09:49 GMT   |   Update On 2021-05-04 09:49 GMT
எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட பழனிசாமி, 93802 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது வீட்டில் தங்கி உள்ளார்.

சேலம்:

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. இதில் கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெற்றது. சேலம் மாவட்டத்தில் மட்டும் 11 தொகுதிகளில் 8 தொகுதிகளை அ.தி.மு.க.வும், அதன் கூட்டணி கட்சியான பா.ம.க. 2 தொகுதிகளை கைப்பற்றியது.

இதில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட எடப்பாடி பழனிசாமி, 93802 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது வீட்டில் தங்கி உள்ளார். அவரை முன்னாள் அமைச்சர்கள் சந்தித்து பேசினர்.


இதைத்தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் அ.தி.மு.க.வை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (சேலம் தெற்கு), ராஜமுத்து (வீரபாண்டி), சுந்தரராஜன் (சங்ககிரி), சித்ரா (ஏற்காடு), ஜெயசங்கரன் (ஆத்தூர்), நல்லதம்பி (கெங்கவல்லி), மணி (ஓமலூர்) ஆகிய 7 பேரும், பா.ம.க.வை சேர்ந்த அருள் (சேலம் மேற்கு), சதாசிவம் (மேட்டூர்) ஆகியோரும் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து தேர்தல் வெற்றி சான்றிதழ்களை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

Tags:    

Similar News