செய்திகள்
உதயநிதி ஸ்டாலின் வெற்றி

திருவல்லிக்கேணியில் 68,133 வாக்குகள் வித்தியாசத்தில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி

Published On 2021-05-02 12:01 GMT   |   Update On 2021-05-02 12:01 GMT
சென்னை திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் 68,133 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
சென்னை

தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் பலத்த பாதுகாப்புடன் எண்ணப்பட்டு வருகின்றன. சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின், பாமக சார்பில் கசாலி, அமமுக சார்பில் ராஜேந்திரன் ஆகியோர் களத்தில் இருந்தனர்.

ஓட்டு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகித்து வந்தார். இந்நிலையில் 25-வது சுற்றின் முடிவில் உதயநிதி ஸ்டாலின் பாமக வேட்பாளர் கசாலியை விட 68,133 வாக்குகள் அதிகம் பெற்று அமோக வெற்றி பெற்றார்.

Tags:    

Similar News