செய்திகள்
கோவை தெற்கு தொகுதியில் மயூரா ஜெயக்குமாரை பின்னுக்கு தள்ளிய வானதி சீனிவாசன்
கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் 1745 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
கோவை
தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் பலத்த பாதுகாப்புடன் எண்ணப்பட்டு வருகின்றன. கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் போட்டியிட்டார். பாஜக சார்பில் வானதி சீனிவாசன், காங்கிரஸ் சார்பில் மயூரா ஜெயக்குமார், அமமுக சார்பில் துரைசாமி என்ற சேலஞ்சர் துரை, நாம் தமிழர் கட்சி சார்பில் அப்துல் வகாப் ஆகியோர் போட்டியிட்டனர்.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே கமல் ஹாசன், காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் இருவரும் மாறி மாறி முன்னிலை வகித்து வந்தனர். இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமாரை பின்னுக்கு தள்ளி வானதி சீனிவாசன் முன்னேறியுள்ளார்.
தற்போதைய நிலவரப்படி சுமார் 1745 வாக்குகள் வித்தியாசத்தில் கமல் ஹாசன் முன்னிலையில் உள்ளார். கமல் ஹாசன் 26002 வாக்குகளும், வானதி சீனிவாசன் 24257 வாக்குகளும், மயூரா ஜெயக்குமார் 21501 வாக்குகளும் பெற்றுள்ளனர்.