செய்திகள்
சீமான்

திருவொற்றியூர் தொகுதியில் நடிகர் சீமான் பின் தங்கினார்

Published On 2021-05-02 07:36 GMT   |   Update On 2021-05-02 07:36 GMT
திருவொற்றியூர் தொகுதியில் முதல் சுற்று வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டதில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் 1,639 ஓட்டுகள் பெற்று பின் தங்கினார்.

தமிழக சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளரும், நடிகருமான சீமான் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்டார்.

அவரை எதிர்த்து அ.தி.மு.க. வேட்பாளராக குப்பனும், தி.மு.க. வேட்பாளராக கே.பி.சங்கரும் போட்டியிட்டனர்.

முதல் சுற்று வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டதில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் 1,639 ஓட்டுகள் பெற்று பின் தங்கினார்.

இந்த தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் கே.பி.சங்கர் 2,818 ஓட்டுகள் பெற்று முதலிடத்தில் முன்னிலையில் இருந்தார். அ.தி.மு.க. வேட்பாளர் குப்பன் 1,961 ஓட்டுகள் பெற்று 2-வது இடத்தில் இருந்தார்.

Tags:    

Similar News