செய்திகள்
கோப்புப்படம்

திருப்பூர் மாவட்டத்தில் காங்கயத்தில் அதிகபட்ச வாக்குப்பதிவு

Published On 2021-04-07 09:54 GMT   |   Update On 2021-04-07 09:54 GMT
திருப்பூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 23 லட்சத்து 59 ஆயிரத்து 804 வாக்காளர்களில் 16 லட்சத்து 41 ஆயிரத்து 335 பேர் வாக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்திலுள்ள திருப்பூர் வடக்கு, தெற்கு, அவிநாசி (தனி), பல்லடம், உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் (தனி), காங்கயம் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவுகள் நடந்து முடிந்தன. திருப்பூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 23 லட்சத்து 59 ஆயிரத்து 804 வாக்காளர்களில் 16 லட்சத்து 41 ஆயிரத்து 335 பேர் வாக்குப்பதிவு செய்துள்ளனர். மொத்தம் 70.12 சதவீத வாக்குப்பதிவு நடந்து முடிந்தது.

திருப்பூர் வடக்கு தொகுதியில் மொத்தமுள்ள 3 லட்சத்து 79 ஆயிரத்து 113 வாக்காளர்களில் 2 லட்சத்து 37 ஆயிரத்து 355 பேர் வாக்குப்பதிவு செய்துள்ளனர். இது 62.6சதவீதம்.

திருப்பூர் தெற்கு தொகுதியில் மொத்தமுள்ள 2 லட்சத்து 76 ஆயிரத்து 473 வாக்காளர்களில் 1 லட்சத்து 73 ஆயிரத்து 651 வாக்குப்பதிவு செய்துள்ளனர். சதவீதம் 62.80 சதவீதம்.

அவிநாசி (தனி) தொகுதியில் மொத்தமுள்ள 2 லட்சத்து 80 ஆயிரத்து 551 வாக்காளர்களில் 2 லட்சத்து 10 ஆயிரத்து 912 பேர் வாக்கு பதிவு செய்துள்ளனர். அது 75.18 சதவீதம்.

பல்லடம் தொகுதியில் மொத்தமுள்ள 3 லட்சத்து 89 ஆயிரத்து 760 வாக்காளர்களில் 2 லட்சத்து 60 ஆயிரத்து 169 பேர் வாக்குப்பதிவு செய்துள்ளனர். அது 66.66 சதவீத வாக்குப்பதிவாகும்.

உடுமலை தொகுதியில் மொத்தமுள்ள 2 லட்சத்து 69 ஆயிரத்து 728 வாக்காளர்களில் 1 லட்சத்து 92 ஆயிரத்து 634 பேர் வாக்குப்பதிவு செய்தனர். அது 71.42 சதவீதம்.

மடத்துக்குளம் தொகுதியில் மொத்தமுள்ள 2 லட்சத்து 48 ஆயிரத்து 470 வாக்காளர்களில் 1 லட்சத்து 76 ஆயிரத்து 126 பேர் வாக்குப்பதிவு செய்துள்ளனர். அது 70.88 சதவீதம்.

தாராபுரம் (தனி) தொகுதியில் மொத்தமுள்ள 2 லட்சத்து 58 ஆயிரத்து 547 வாக்காளர்களில் 1 லட்சத்து 91 ஆயிரத்து 709 பேர் வாக்குப்பதிவு செய்துள்ளனர். அது 74.14 சதவீதம்.

காங்கயத்தில் மொத்தமுள்ள 2 லட்சத்து 57 ஆயிரத்து 162 வாக்காளர்களில் 1 லட்சத்து 98 ஆயிரத்து 779 பேர் வாக்குப்பதிவு செய்துள்ளனர். அது 77.20 சதவீத வாக்குப்பதிவாகும். மொத்தம் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 69.55 சதவீதம் வாக்கு பதிவாகி உள்ளது.

மாவட்டத்தில் அதிக பட்சமாக காங்கேயத்தில் வாக்குப்பதிவு ஆகியுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலிலும் காங்கயத்தில் அதிகபட்சமாக வாக்குப்பதிவானது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News