செய்திகள்
வாக்களிக்க காத்திருந்த மக்கள்

தமிழகத்தில் 72.78 சதவீத வாக்குப்பதிவு- மாவட்டம் வாரியாக அதிகாரப்பூர்வ விவரம்

Published On 2021-04-07 08:46 GMT   |   Update On 2021-04-08 07:41 GMT
தமிழக சட்டசபைக்கு கடந்த 6-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் 72.78 சதவீத வாக்குகள் பதிவாகின.
சென்னை:

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நேற்று முன்தினம் அமைதியாக நடந்தது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை ஓட்டுப்பதிவு நடந்தது.

கொளுத்தும் வெயிலிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு இருந்தது. 71.79 சத வீதம் வாக்குகள் பதிவாகி இருந்ததாக தேர்தல் கமி‌ஷன் நேற்றுமுன்தினம் இரவு தெரிவித்தது. அதிகாரப்பூர்வ ஓட்டுப் பதிவு விவரம் நேற்று அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் 72.78 சதவீத வாக்குகள் பதிவானதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நேற்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார். 234 தொகுதிகளுக்கான ஓட்டு சதவீத விவரத்தையும் அவர் வெளியிட்டார்.

2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுடன் ஒப்பிடுகையில் 1.48 சதவீதம் குறைவாகும். கடந்த தேர்தலில் 74.26 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது.

தமிழ்நாட்டில் பதிவான 72.78 சதவீத வாக்குகளில் பாலக்கோட்டில்தான் அதிகபட்ச ஓட்டு பதிவாகி இருந்தது.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதியில் அதிகபட்சமாக 87.33 சதவீத வாக்குகள் பதிவானது. அதற்கு அடுத்தபடியாக குளித்தலையில 86.15 சதவீத வாக்குகள் பதிவானது.


முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி போட்டியிட்ட எடப்பாடி தொகுதியில் 85.6 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. தமிழ்நாட்டில் ஓட்டுகள் அதிகம் பதிவான 3-வது தொகுதியாகும்.

அதற்கு அடுத்தபடியாக வீரபாண்டி 85.53 சதவீதமும், அரியலூரில் 84.58 சதவீதமும் ஓட்டுகள் பதிவானது.

தமிழ்நாட்டில் குறைந்த பட்சமாக வில்லிவாக்கம் தொகுதியில் வாக்குகள் பதிவாகி இருந்தது. சென்னை மாவட்டத்தில் உள்ள அந்த தொகுதியில் 55.52 சதவீத ஓட்டுகள் பதிவானது.

அதற்கு அடுத்தபடியாக தி.நகரில் 55.92 சதவீதமும், வேளச்சேரியில் 55.95 சதவீதமும், மயிலாப்பூரில் 56.59 சதவீதமும், அண்ணாநகரில் 57.02 சதவீத வாக்குகளும் பதிவாகி இருந்தது.

தலைவர்கள் போட்டியிடும் தொகுதியில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி போட்டியிட்ட எடப்பாடியில்தான் அதிகபட்ச வாக்கு பதிவாகி இருந்தது.

ஓ.பன்னீர் செல்வம் போட்டியிட்ட போடி தொகுதியில் 73.65 சதவீதமும், டி.டி.வி.தினகரனின் கோவில்பட்டியில் 67.43 சதவீதமும், சீமானின் திருவொற்றியூரில் 65 சதவீதமும், கமல்ஹாசன் போட்டியிட்ட கோவை தெற்கு தொகுதியில் 60.72 சதவீதமும், மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் 60.52 சதவீதமும் வாக்குகள் பதிவாகி இருந்தது.

மாவட்டத்தை பொறுத்தவரை கரூர் மாவட்டத்தில் தான் அதிகபட்சமாக 83.92 சதவீத வாக்குகள் பதிவானது. குறைந்தபட்சமாக சென்னை மாவட்டத்தில் 59.06 ஓட்டுகள் பதிவாகி இருந்தது.

மாவட்ட வாரியாக பதிவான வாக்கு சதவீதத்தை பார்ப்போம்...

திருவள்ளூர் -70.56%
சென்னை -59.06 %
காஞ்சிபுரம் - 71.98%
வேலூர் - 73.73%
கிருஷ்ணகிரி - 77.30%
தர்மபுரி - 82.35%
திருவண்ணாமலை - 78.62%
விழுப்புரம் -7856%
சேலம் - 79.22%
நாமக்கல் - 79.72%
ஈரோடு - 77.07%
நீலகிரி - 69.68%
கோவை - 68.70%
திண்டுக்கல் - 77.13%
கரூர் - 83.92%
திருச்சி  - 73.79%
பெரம்பலூர் - 79.09%
கடலூர் - 76.50%
நாகை - 75.48%
திருவாரூர் - 76.53%
தஞ்சை - 74.13%
புதுக்கோட்டை  - 76.41%
சிவகங்கை - 68.94%
மதுரை  -70.33%
தேனி  71.75%
விருதுநகர்  - 73.77%
ராமநாதபுரம் - 69.60%
தூத்துக்குடி -70.20%
திருநெல்வேலி - 66.65%
கன்னியாகுமரி - 68.67%
அரியலூர் - 82.47%
திருப்பூர் - 70.12%
கள்ளக்குறிச்சி - 80.14%
தென்காசி - 72.63%
செங்கல்பட்டு -68.18%
திருப்பதூர்  - 77.33%
ராணிப்பேட்டை  - 77.92%
Tags:    

Similar News