செய்திகள்
ஜேபி நட்டா

தமிழர்கள் நலனுக்கு திமுக- காங்கிரஸ் கட்சிகள் துரோகம் செய்து விட்டது: ஜேபி நட்டா பேச்சு

Published On 2021-04-04 10:53 GMT   |   Update On 2021-04-04 10:53 GMT
குமரியில் ரப்பர் விவசாயம் அதிகம் உள்ளது. ரப்பர் தொழிற்சாலை கொண்டு வர பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரியுங்கள் என்று ஜேபி நட்டா பேசியுள்ளார்.

நாகர்கோவில்:

குமரி மாவட்டம் அருமனையில் நடந்த பிரசார கூட்டத்தில் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கலந்து கொண்டு தேசிய ஜனநாயக கூட்டணியின் பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் பாரதீய ஜனதா வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன், விளவங்கோடு சட்டசபை பாரதீய ஜனதா வேட்பாளர் ஜெயசீலன் ஆகியோரை ஆதரித்து பேசி வாக்குகள் சேகரித்தார். அப்போது அவர் பேசிய தாவது:-

கேரளத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு எதிர் எதிர் அணியில் போட்டியிடுகிறார்கள். ஆனால் இங்கும், அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்டு கட்சியுடன் கை குலுக்கி கூட்டணி வைத்துள்ளார்கள். அசாமில் பயங்கரவாத கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளார்கள். காங்கிரஸ் மனநிலை இழந்து விட்டதற்கு இதை விட வேறு எடுத்துக்காட்டு கூற முடியது.

காங்கிரசும், தி.மு.க.வும் குடும்ப அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். ஊழலுக்கு எடுத்துக்காட்டாக இருப்பது காங்கிரஸ், தி.மு.க. கட்சிகள்.

காங்கிரஸ், தி.மு.க. கட்சிகள் தமிழர் நலனுக்கு எதுவும் செய்யாமல் துரோகம் செய்து விட்டார்கள். காங்கிரஸ் ஆட்சியில் மாசு கட்டுப்பாட்டுத்துறை மந்திரியாக இருந்த ஜெய்ராம் ரமேஷ் ஜல்லிக் கட்டுப்போட்டிக்கு தடை கொண்டு வந்தார். அப்போது கூட்டணியில் இருந்த தி.முக. பேசாமல் இருந்தது. அவர்கள் அமைதியாக இருந்ததற்கு 2ஜி ஊழல்தான் காரணம். மோடி ஆட்சிக்கு வந்த பிறகு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை நீக்கப்பட்டு, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டுக்காக மோடி நிறைய திட்டங்கள் கொண்டு வந்துள்ளார். தமிழ் ஈழத்தில் தமிழர்களை படுகொலை செய்தது காங்கிரஸ் அரசு. ஆனால், தமிழர்கள் பாதித்த யாழ்ப்பாணம் பகுதியில் நேரில் சென்று தமிழர்களை சந்தித்து, அவர்கள் பரிதாப நிலையை பார்த்து பிரதமர் மோடி வீடுகள் கட்டிக் கொடுத்தார். தமிழகத்தைச் சேர்ந்த நிர்மலா சீதாராமனை நாட்டின் நிதி மந்திரியாக ஆக்கினார். அதேபோல், ஜெய்சங்கரை வெளியுறவுத் துறை மந்திரியாக்கி இலங்கை விவகாரங்களை கவனிக்கச் செய்தார்.

தி.மு.க. ஆசி பெற்ற கருப்பர் கூட்டம் தமிழர்களின் கடவுளான முருகனை இழிவுப்படுத்தி பேசினார்கள். அதற்காக பா.ஜ.க. வேல் யாத்திரை நடத்தியது. முருகனை பற்றி கூறிய கருத்தை தமிழக மக்கள் எதிர்த்ததால் ஸ்டாலின் இப்போது வேல் ஏந்தி பிரசாரம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. நாத்திகம் பேசிய தி.மு.க. இன்று ஆத்திகம் பேசி வாக்கு சேகரித்து வருகிறது.


தமிழகத்தில் இந்த பகுதியில் ரப்பர் விவசாயம் அதிகம் உள்ளது. ரப்பர் தொழிற்சாலை கொண்டு வர பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரியுங்கள். மதுரையில் எய்ம்ஸ் மற்றும் தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகளுக்கு பொன். ராதாகிருஷ்ணன் முயற்சியால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமைக்க பொன். ராதாகிருஷ்ணனுக்கு வாக்களியுங்கள். தேர்தல் காரணமாக நான் சில வி‌ஷயங்களை விரிவாக சொல்ல வில்லை. இடைத்தேர்தலில் வெற்றி பெறும் பொன். ராதாகிருஷ்ணனுக்கு முக்கிய பொறுப்பு அளிக்கப்படும்.

இவ்வாறு ஜே.பி. நட்டா பேசினார்.

Tags:    

Similar News