செய்திகள்
கூகுள் பே

கூகுள் பே செயலிக்கு தடை கோரி தேர்தல் ஆணையத்திடம் மனு

Published On 2021-04-01 06:43 GMT   |   Update On 2021-04-01 06:43 GMT
தேர்தல் நெருங்கும் சமயத்தில் ஆன்லைன் செயலிகள் மூலம் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்ய வாய்ப்பு உள்ளது.
மதுரை:

தமிழகத்தில் வரும் 6ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. வேட்பாளர்கள் வீடு வீடாகச் சென்று பொதுமக்களை சந்தித்து வாக்கு கேட்கின்றனர். வாக்காளர்களை கவரும் வகையில் அரசியல் கட்சிகள் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி உள்ளன. 

வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருள் கொடுப்பதை தடுக்கும் வகையில் தேர்தல் ஆணையம் சோதனையை தீவிரப்படுத்தி உள்ளது. எனவே, ஆன்லைன் செயலிகள் மூலம் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்ய வாய்ப்பு உள்ளது. 



இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராமசுப்பிரமணியன், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவுக்கு மனு அனுப்பி உள்ளார். அதில், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க வேண்டும் என்றும், இதற்காக, நாளை முதல் ஏப்ரல் 5ம் தேதி வரை பணப்பரிமாற்ற செயலிகள் மூலம் பணப்பரிமாற்றத்தை தடை செய்ய வேணடும் என்றும் கூறி உள்ளார்.

கூகுள் பே, போன் பே, பேடிஎம், அமேசான் பே போன்ற செயலிகளில் பணப்பரிமாற்றத்தை தடை செய்யும்படி வழக்கறிஞர் ராமசுப்பிரமணியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
Tags:    

Similar News