செய்திகள்
ஜிகே வாசன்

ஜி.கே.வாசன் இன்று சென்னையில் பிரசாரம்

Published On 2021-03-26 05:52 GMT   |   Update On 2021-03-26 05:52 GMT
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் நாளை மாலை 4 மணிக்கு அரவக்குறிச்சி தொகுதி வேலாயுதம்பாளையத்தில் பிரசாரம் செய்கிறார்.
சென்னை:

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் இன்று மாலை சென்னையில் பிரசாரம் செய்கிறார்.

இது தொடர்பாக அக்கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு- சைதாப்பேட்டை, 6 மணிக்கு ஆயிரம்விளக்கு, இரவு 7 மணிக்கு சேப்பாக்கம்- திருவல்லிக்கேணியில் ஜி.கே.வாசன் பிரசாரம் செய்கிறார்.

நாளை (27-ந்தேதி) மாலை 4 மணிக்கு அரவக்குறிச்சி தொகுதி வேலாயுதம்பாளையத்திலும், 6 மணிக்கு குமாரப்பாளையம் தொகுதி பள்ளிப்பாளையத்திலும், இரவு 8 மணிக்கு எடப்பாடி தொகுதி கொங்கணாபுரத்திலும் பிரசாரம் செய்கிறார்.

28-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணிக்கு தொண்டாமுத்தூர் தொகுதி ஆர்.எஸ்.புரத்திலும், 10 மணிக்கு கோவை தெற்கு தொகுதியிலும், மாலை 4 மணிக்கு தாராபுரத்திலும் பிரசாரம் செய்கிறார்.

29-ந்தேதி (திங்கட்கிழமை) மாலை 4 மணிக்கு பட்டுக்கோட்டை தொகுதி ஒரத்தநாடுவிலும், 6 மணிக்கு பட்டுக்கோட்டையிலும் பிரசாரம் செய்கிறார்.

30-ந்தேதி முதல் 4-ந் தேதி வரையிலான சுற்றுப்பயண விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News