செய்திகள்
கமல்

மக்களின் வாழ்க்கை இருட்டாக உள்ளது... காந்தி சிலை முன்பு நின்று காட்டமாக பேசிய கமல்

Published On 2021-03-25 10:39 GMT   |   Update On 2021-03-25 10:39 GMT
மகாத்மாகாந்தி இப்ப உயிரோடு இருந்திருந்தா சந்தோ‌ஷமா இருந்திருப்பாருன்னு நினைக்கிறீங்களா? இவர் நினைச்ச இந்தியாவின் பெருமை அதிகரிச்சு இருக்குதோ இல்லையோ மற்ற எல்லாம் அதிகரிச்சு இருக்கிறது என்று கமல் காட்டமாக பேசியுள்ளார்.

சென்னை:

சட்டசபை தேர்தலையொட்டி கமல்ஹாசன் டுவிட்டர் பக்கத்தில் ஒரு பிரசார வீடியோ வெளியிட்டுள்ளார். மகாத்மாகாந்தி சிலையின் கீழ் நின்று பேசுகிற அந்த வீடியோவில் கமல் கூறி இருப்பதாவது:-

இவர் (காந்தி) இப்ப உயிரோடு இருந்திருந்தா சந்தோ‌ஷமா இருந்திருப்பாருன்னு நினைக்கிறீங்களா? இவர் நினைச்ச இந்தியாவின் பெருமை அதிகரிச்சு இருக்குதோ இல்லையோ மற்ற எல்லாம் அதிகரிச்சு இருக்கிறது.

வேலை வாய்ப்பின்மை, கொலை குற்றங்கள், விலைவாசி, பெட்ரோல்-டீசல் விலை எப்படி எறி இருக்கு தெரியுமா? சரி... காந்தி மாதிரி கோவிச்சுகிட்டு தெருவுல இறங்கி சத்யாகிரகம் பண்ணலாம்னா அதுவும் குண்டும் குழியுமா இருக்கு. ஏன்னா இப்ப எலக்சனுக்காக அவசரம் அவசரமாக போட்ட ஊழல் ரோடுதான் இது! சரி ஊழல் தொலையட்டும் விடுங்க! அய்யா அம்பேத்கர் கொடுத்த அரசியல் சட்டத்தின் பலத்தில் நாம் வாழ்ந்திடலாம்னு நினைச்சுகிட்டு இருந்தா, மேல இருந்து ஒருத்தரு என்ன மொழி பேசுறதுன்னு சொல்றாரு. என்ன சாப்பிடறதுன்னு சொல்றாரு. என்ன சிந்திக்கனும்னு சொல்றாரு. இந்த தேசத்தை எப்படி நேசிக்கனம்னு அவர் சொல்லி கொடுக்கிறாரு.

யோவ்... உன்னோட ஊர் மேப்ல மேல இருக்கிறதால அதான் மேலிடம்னு நினைச்சுடாத நீ... நீ... இங்கிருந்து பாரு... இதுதான் தலைவாசல்... இப்படி கோவமாக இங்கு இருந்து ஒரு ஆள் பேசுவான்னு பார்த்தா அங்க போய் இந்த ஆளு கையை கட்டிட்டு நிற்கிறாரு. இதுல சைரன் வேற... இவங்க வாழ்க்கை ஒளிமயமாக இருக்கணும்... ஆனா நம்ம வாழ்க்கை? இந்த இருட்டுல இருந்து வெளிச்சத்துக்கு வரனும்னா ஒரே ஒரு வழிதான் இருக்கு டார்ச்லைட்... சீரமைப்போம் தமிழகத்தை! நாளை நமதே!

இவ்வாறு கமல்ஹாசன் அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

Tags:    

Similar News