செய்திகள்
நூதன பிரசாரம்

கமல்ஹாசன் கட்சி வேட்பாளர் நூதன பிரசாரம்

Published On 2021-03-20 02:30 GMT   |   Update On 2021-03-20 02:30 GMT
கமல்ஹாசன் கட்சி வேட்பாளர் திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுப்பது போல் ‘தேர்தல் விழா’ என்ற தலைப்பில் அச்சிடப்பட்ட அழைப்பிதழ்களை வழங்கி நூதன பிரசாரம் செய்து வருகிறார்.
கம்பம்:

தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கம்பத்தை சேர்ந்த வேதா வெங்கடேஷ் (வயது 30) என்பவர் வேட்பாளராக போட்டியிடுகிறார். அவர் தனக்கு வாக்கு சேகரிக்கும் வகையில் கம்பத்தில் வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுப்பது போல் ‘தேர்தல் விழா’ என்ற தலைப்பில் அச்சிடப்பட்ட அழைப்பிதழ்களை வழங்கி நூதன பிரசாரம் செய்து வருகிறார்.

அந்த அழைப்பிதழில், உங்கள் வீட்டு விசேஷம் என்று முன்பக்கம் அச்சிடப்பட்டிருந்தது. உள்பக்கத்தில் தேர்தல் விழா, நாள் 6-4-2021 (செவ்வாய்க்கிழமை), நேரம்-காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அதில், ம.நீ.ம. கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை குறிப்பிட்டு, எத்தனை முறை தான் ஏமாற்றுவார்கள் இந்த நாட்டிலே, எனவே எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என்று அச்சிடப்பட்டிருந்தது. ம.நீ.ம. வேட்பாளரின் இந்த நூதன பிரசாரம், கம்பம் பகுதி மக்களை வெகுவாக கவர்ந்ததுள்ளது. 
Tags:    

Similar News