செய்திகள்
டாக்டர் சரவணன்

கட்சியில் சேர்ந்த 3½ மணி நேரத்தில் வேட்பாளரான டாக்டர் சரவணன்

Published On 2021-03-15 02:52 GMT   |   Update On 2021-03-15 02:52 GMT
சமீபத்தில் பா.ஜ.க.வில் இணைந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை, நடிகை குஷ்பு, நயினார் நாகேந்திரன் ஆகியோருக்கு 'ஜாக்பாட்' அடித்துள்ளது.
சென்னை:

திருப்பரங்குன்றம் தி.மு.க. எம்.எல்.ஏ.வான சரவணன் நேற்று பிற்பகலில் தான் அக்கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தார். அவர் சேர்ந்த சுமார் 3½ மணி நேரத்தில் டெல்லியில் இருந்து வெளியான தமிழக சட்டசபை தேர்தலுக்கான பா.ஜ.க. வேட்பாளர்கள் பட்டியலில் அவர் இடம் பிடித்துள்ளார். அவருக்கு மதுரை வடக்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேபோல சமீபத்தில் பா.ஜ.க.வில் இணைந்த முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை, நடிகை குஷ்பு, நயினார் நாகேந்திரன் ஆகியோருக்கு 'ஜாக்பாட்' அடித்துள்ளது. இது கட்சியில் நீண்ட காலமாக உழைத்து வரும் பா.ஜ.க.வினரை புருவத்தை உயர்த்த வைத்துள்ளது. தங்களது உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று சிலர் ஆதங்கம் தெரிவித்தனர்.
Tags:    

Similar News