செய்திகள்
பா.ம.க.

3வது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ம.க.

Published On 2021-03-11 19:09 GMT   |   Update On 2021-03-11 19:09 GMT
சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. 23 தொகுதிகளில் களம் காண்கிறது.
சென்னை:

சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. 23 தொகுதிகளில் களம் காண்கிறது. இதில் 10 தொகுதிகளுக்கு முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
 
தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ம.க.வுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.

முதல் கட்டமாக பா.ம.க. சார்பில் போட்டியிடும் 10 வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலும், 2வது கட்டமாக 9 வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலும் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், 3-வது கட்ட வேட்பாளர் பட்டியலை  பா.ம.க. வெளியிட்டது. இது தொடர்பாக பா.ம.க. வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

மேட்டூரில் எஸ். சதாசிவம், பூந்தமல்லி (தனி) தொகுதியில் முன்னாள் எம்எல்ஏ எஸ்.எக்ஸ் ராஜமன்னார், சங்கராபுரம் தொகுதியில் மருத்துவர். ராஜா, வந்தவாசி (தனி) தொகுதியில் எஸ். முரளி சங்கர் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

முன்னதாக, பூந்தமல்லி தொகுதியை பாமகவுக்கு ஒதுக்கியதை எதிர்த்து அதிமுகவினர் சாலைமறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இந்நிலையில் பூந்தமல்லி தொகுதிக்கு பாமக சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். இத்தொகுதியில் திமுக வேட்பாளர் களம் இறங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News