செய்திகள்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு

Published On 2021-03-11 17:47 GMT   |   Update On 2021-03-11 17:47 GMT
தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்துள்ள மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 6 இடங்களில் போட்டியிடுகிறது.
சென்னை:

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்படுகிறது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டத்தையடுத்து, ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் வேட்பாளர் தேர்வு, கூட்டணி, தொகுதி பங்கீடு, பிரசாரம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் 6 தொகுதிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன் விவரம் வருமாறு:

திருப்பரங்குன்றம், கந்தர்வக்கோட்டை (தனி), திண்டுக்கல், கோவில்பட்டி, அரூர் (தனி), கீழ் வேளூர் (தனி)

இதற்கான ஒப்பந்தம் அண்ணா அறிவாலயத்தில் இன்று இரவு கையெழுத்தானது.
Tags:    

Similar News