செய்திகள்
வேல்முருகன்- ஸ்டாலின்

திமுக கூட்டணியில் வேல்முருகன் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு- உதயசூரியன் சின்னத்தில் போட்டி

Published On 2021-03-08 14:04 GMT   |   Update On 2021-03-08 14:04 GMT
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற ஆதித் தமிழர் பேரவைக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டத்தையடுத்து, ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் வேட்பாளர் தேர்வு, கூட்டணி, தொகுதி பங்கீடு, பிரசாரம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியுள்ளது.

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் - 3, மனிதநேய மக்கள் கட்சி - 2, விடுதலை சிறுத்தைகள் - 6, இந்திய கம்யூனிஸ்ட் - 6, மதிமுக - 6, காங்கிரஸ் - 25, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒதுக்கப்பட்டுள்ள 1 தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் த.வா.க. போட்டியிடும் என்று வேல்முருகன் கூறினார். பண்ருட்டி அல்லது நெய்வேலி தொகுதியை ஒதுக்கீடு செய்ய திமுக தலைமையிடம் கேட்டுள்ளோம் என்றார்.

திமுக கூட்டணியில் ஆதித் தமிழர் பேரவைக்கும் ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒதுக்கீடு செய்த 1 தொகுதியில் ஆதித் தமிழர் பேரவை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் அதியமான் தெரிவித்துள்ளார்.

இதேபோல் திமுக கூட்டணியில் மக்கள் விடுதலைக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒதுக்கப்பட்டுள்ள 1 தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் மக்கள் விடுதலைக் கட்சி போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் முருகவேல் ராஜன் கூறினார்.
Tags:    

Similar News