செய்திகள்
ப.சிதம்பரம்

தொகுதிகள் குறைந்ததற்கு காங்கிரஸ் கட்சியின் தவறே காரணம் – ப.சிதம்பரம்

Published On 2021-03-07 13:49 GMT   |   Update On 2021-03-07 13:49 GMT
வெற்றி பெறும் வாய்ப்பை வைத்துதான் கூட்டணி கட்சிக்கு இடம் ஒதுக்குவதை கணிப்பார்கள் என முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
சென்னை:

திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டது தொடர்பாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியதாவது:-

வருகிற சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் தொகுதிகள் குறைக்கப்பட்டுள்ளதற்கு காங்கிரஸ் கட்சியின் தவறே காரணம். கடந்த காலங்களில் 60 சீட் தந்தும் சில இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்ததால், காங்கிரசுக்கு தொகுதிகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. வெற்றி பெறும் வாய்ப்பை வைத்துதான் கூட்டணி கட்சிக்கு இடம் ஒதுக்குவதை கணிப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொகுதி பங்கீடு குறித்து திமுக – காங்கிரஸ் இடையே தொடர்ந்து இழுபறி நீடித்து வந்த நிலையில், 25 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட்டு வழங்கி ஒப்பந்தம் இன்று காலை கையெழுத்தானது. 

காங்கிரஸ் தரப்பில் 35 லிருந்து குறைந்தது 27 தொகுதிகளாவது ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்த நிலையில், திமுக 25 தொகுதிகளை ஒதுக்கீடு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News