செய்திகள்
மாம்பழம் சின்னம்.

பாமகவுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு- இந்திய தேர்தல் ஆணையம்

Published On 2021-03-06 11:28 GMT   |   Update On 2021-03-06 11:28 GMT
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் உள்ள பாமக, 23 தொகுதிகளில் மாம்பழம் சின்னத்தில் போட்டியிட உள்ளது.
சென்னை:

தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 12-ந்தேதி தொடங்க உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது. 

ஆளும் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா, பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகளும் பாஜகவுக்கு 20 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன. 

இந்நிலையில், சட்டப்பேரவை தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதிமுக கூட்டணியில் உள்ள பாமக, 23 தொகுதிகளில் மாம்பழம் சின்னத்தில் போட்டியிட உள்ளது. பாமகவின் கோரிக்கையை ஏற்று மாம்பழம் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.
Tags:    

Similar News