செய்திகள்
ஜிகே வாசன்

சைக்கிள் சின்னம் கிடைக்க த.மா.கா. போராடுகிறது- ஜி.கே.வாசன்

Published On 2021-03-06 08:46 GMT   |   Update On 2021-03-06 08:46 GMT
தமிழ்நாட்டில்தான் பெண்களுக்கான நலத்திட்டங்கள் அதிகளவில் செயல்படுத்தப்பட்டு வருவதாக த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
சென்னை:

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கட்சியின் மகளிர் அணி சார்பில் அடையாறில் நடந்த உலக மகளிர் தின விழாவில் கலந்து கொண்டார்.

விழாவுக்கு மகளிர் அணி தலைவி ராணிகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 14 பெண்களுக்கு ஜி.கே.வாசன் விருது வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில்தான் பெண்களுக்கான நலத்திட்டங்கள் அதிகளவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெண்களை கவுரவிக்கும் வகையில் இந்த விழா நடத்தப்படுகிறது.

தற்போது அ.தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் சுமூகமாக நடந்து வருகிறது. எத்தனை தொகுதிகள் என்பது இதுவரை முடிவாகவில்லை. அவர்கள் ஒதுக்குவதாக கூறிய தொகுதிகள் இன்னும் 2 நாளில் முடிவாகும்.

த.மா.கா. சைக்கிள் சின்னத்தை பெறுவதற்காகதான் 12 தொகுதிகளை வலியுறுத்துகிறோம். ஏற்கனவே இந்த சின்னத்துக்காக சட்ட போராட்டங்களும் நடக்கிறது.

கூட்டணி பேச்சுவார்த்தையில் சைக்கிள் சின்னத்துக்கான தொகுதிகள் கிடைக்க தொடர்ந்து முயற்சித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் துணை தலைவர் கோவை தங்கம், செயலாளர் என்.டி.எஸ். சார்லஸ், டி.எம்.பிரபாகர், மாவட்ட தலைவர்கள் கொட்டிவாக்கம் முருகன், பிஜுஜாக்கோ, சைதை மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News