செய்திகள்
திருமாவளவன்

பாஜகவின் 20 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும்- திருமாவளவன்

Published On 2021-03-06 08:04 GMT   |   Update On 2021-03-06 08:04 GMT
தமிழகத்தில் எண்கள் ரீதியாக அ.தி.மு.க. தலைமையில் கூட்டணி அமைந்திருந்தாலும் உண்மையில் பா.ஜனதா தான் இயக்கிக் கொண்டிருக்கிறது என்று திருமாவளவன் கூறினார்.
சென்னை:

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதாவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் பா.ஜனதா போட்டியிடும் 20 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணியே வெற்றி பெறும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி இடையே தான் போட்டி நிலவுகிறது. இந்த 3-வது அணி திடீரென உருவாகி திடீரென முடிந்துவிடும்.

மத்திய அரசு கொண்டு வரும் அனைத்து திட்டங்களுக்கும் அ.தி.மு.க. ஆதரவு அளிக்கிறது. அவர்களால் அழுத்தம் கொடுக்க முடியவில்லை. இது அ.தி.மு.க.வுக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தவில்லை.

தமிழகத்தில் பா.ஜனதா ஒரு தொகுதியில் 10 ஆயிரம் ஓட்டுகள் கூட வாங்க முடியாது. பா.ஜனதா போட்டியிடும் தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது.

தமிழகத்தில் பா.ஜனதா கட்சி வளர்ந்து விட்டதாக கூறுகிறார்கள். ஆனால் அக்கட்சியில் ரவுடிகள், சினிமாவில் வாய்ப்பு குறைந்தவர்கள் உள்ளிட்டவர்களை சேர்த்து கட்சி வளர்ந்து விட்டதாக தெரிவித்து வருகிறார்கள்.

கமல்ஹாசன் எனக்கு அழைப்பு விடுத்துள்ளது பற்றி கேட்கிறீர்கள். விடுதலை சிறுத்தைகள் கட்சி மீதும், என் மீதும் கமல்ஹாசன் வைத்திருக்கும் எண்ணத்துக்கு நன்றி. ஆனால் வெற்றி கூட்டணியில் 6 தொகுதிகள் பெறுவதற்கும், தோல்வி கூட்டணியில் 25 தொகுதிகள் பெறுவதற்கும் வேறுபாடுகள் உள்ளன.

தமிழகத்தில் எண்கள் ரீதியாக அ.தி.மு.க. தலைமையில் கூட்டணி அமைந்திருந்தாலும் உண்மையில் பா.ஜனதா தான் இயக்கிக் கொண்டிருக்கிறது. இங்கு அ.தி.மு.க., பா.ஜனதா, பா.ம.க. கூட்டணியை தோற்கடிக்க வேண்டும்.

ஏன் என்றால் அவர்கள் மதவெறி, சாதி வெறி, ஊழல் குற்றச்சாட்டில் இருந்து தற்காத்து கொள்ளுவது போன்றவற்றில் ஈடுபடுகிறார்கள். அதற்கு இடம் கொடுக்கக்கூடாது.

தி.மு.க.வுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் அவர்கள் அனைத்து கட்சிகளும் இருக்க வேண்டும் என்றே பேசினார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News