செய்திகள்
ஜெயலலிதா

ஜெயலலிதா பாணியில் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு

Published On 2021-03-06 02:40 GMT   |   Update On 2021-03-06 02:40 GMT
அதிமுக தனது விருப்பமான தொகுதிகளை தக்கவைக்கும் வகையிலும், கூட்டணி கட்சிகளுக்கு ஏமாற்றம் தராத வகையிலும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
சென்னை:

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தேர்தல் சமயங்களில் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போதே, வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு அதிர்ச்சி தருவார்.

அதேபாணியில் தற்போது அ.தி.மு.க. முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். பா.ம.க. தவிர பா.ஜ.க., தே.மு.தி.க., த.மா.கா. ஆகிய கட்சிகளுடன் இன்னும் தொகுதி பங்கீடு நிறைவடையாத நிலையில் அ.தி.மு.க. தனது முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருப்பது அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

ஆனால் இந்த பட்டியலை சாமர்த்தியமாகவே அ.தி.மு.க. வெளியிட்டுள்ளது. அதாவது அ.தி.மு.க. தனது விருப்பமான தொகுதிகளை தக்கவைக்கும் வகையிலும், கூட்டணி கட்சிகளுக்கு ஏமாற்றம் தராத வகையிலும் இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது.

எடப்பாடி, போடிநாயக்கனூர், ராயபுரம், விழுப்புரம், ஸ்ரீவைகுண்டம், நிலக்கோட்டை (தனி) இந்த 6 தொகுதிகளும் அ.தி.மு.க.வின் கோட்டை ஆகும். இந்த தொகுதிகளை எக்காரணம் கொண்டும் கேட்கக்கூட கூட்டணி கட்சிகளுக்கு எண்ணம் வராது என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாக இருக்கிறது.
Tags:    

Similar News