செய்திகள்
எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம்

ஓபிஎஸ், ஈபிஎஸ் முன்னிலையில் அதிமுக வேட்பாளர் நேர்காணல் தொடங்கியது

Published On 2021-03-04 03:38 GMT   |   Update On 2021-03-04 07:02 GMT
அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்தவர்களிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்பட 9 பேர் கொண்ட குழு நேர்காணலை நடத்துகிறது.
சென்னை:

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அ.தி.மு.க. சார்பில் கடந்த மாதம் 24-ந்தேதி முதல் வினியோகிக்கப்பட்டு வந்த வேட்பாளர் விருப்ப மனு நேற்றுடன் நிறைவடைந்தது.

அ.தி.மு.க. சார்பில் போட்டியிட 8 ஆயிரத்து 200 பேர் விண்ணப்பங்கள் தாக்கல் செய்துள்ளனர். இதில் நேற்று ஒரே நாளில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து  அ.தி.மு.க. வேட்பாளர் நேர்காணல், ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் நடைபெறுகிறது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்பட 9 பேர் கொண்ட குழு நேர்காணலை நடத்துகிறது.

அ.தி.மு.க. வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே நாளில் வேட்பாளர் தேர்வு இன்று நடைபெறுகிறது. காலை, மாலை என இரு பிரிவுகளாக வேட்பாளர் நேர்காணல் நடைபெறுகிறது.
Tags:    

Similar News