செய்திகள்
இரட்டை இலை

அ.தி.மு.க. கூட்டணியில் 5 சிறிய கட்சிகள் ‘இரட்டை இலை’ சின்னத்தில் போட்டி

Published On 2021-03-03 09:20 GMT   |   Update On 2021-03-03 09:20 GMT
அ.தி.மு.க. கூட்டணியில் 5 சிறிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அந்த கட்சிகள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகின்றன.
சென்னை:

சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா, பா.ம.க., தே.மு.தி.க., த.மா.கா. ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. பா.ம.க.வுக்கு மட்டும் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தொடர்ந்து நீடித்து வருகிறது.

இந்தநிலையில் அ.தி.மு.க. கூட்டணியில் 5 சிறிய கட்சிகளும் இடம்பெற்றுள்ளன. அந்த கட்சிகள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகின்றன.

என்.ஆர்.தனபாலனின் பெருந்தலைவர் மக்கள் கட்சி, ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக்கட்சி, ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், சேதுராமனின் மூவேந்தர் முன்னணி கழகம், பூவை ஜெகன் மூர்த்தியின் புரட்சி பாரதம் ஆகிய கட்சிகள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகின்றன.
Tags:    

Similar News