செய்திகள்
கவுதமி

தேர்தலில் பா.ஜனதாவிற்கு அருமையான வெற்றி கிடைக்கும்- கவுதமி பேட்டி

Published On 2021-03-03 04:50 GMT   |   Update On 2021-03-03 04:50 GMT
வரும் சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதாவிற்கு அருமையான வெற்றி கிடைக்கும் என்று நடிகை கவுதமி கூறினார்.
கோவை:

கோவை மாவட்ட பா.ஜனதா சார்பில் இருசக்கர வாகன பேரணி நடந்தது. இதில் பா.ஜனதா மாநில செயற்குழு உறுப்பினரும், நடிகையுமான கவுதமி கலந்துகொண்டு பேரணியை தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தேர்தல் பரப்புரையை தொடங்கி இருப்பது பொன்னான எதிர்காலத்திற்கான முதற்படியாகும். வரும் சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதாவிற்கு அருமையான வெற்றி கிடைக்கும். கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிவதற்கு சிறிது நேரம் எடுத்தாலும் விரைவில் அதுதொடர்பான முடிவு எடுக்கப்பட்டு விடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News