செய்திகள்
வாகன சோதனை

பாபநாசத்தில் பறக்கும் படை சோதனையில் தங்க நகைகள் பறிமுதல்

Published On 2021-03-02 10:03 GMT   |   Update On 2021-03-02 10:03 GMT
பாபநாசத்தில் பறக்கும் படை சோதனையில் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

பாபநாசம்:

பாபநாசம் தாலுகாவில் பூண்டி அம்மாமடம் அருகில் பறக்கும் படை அதிகாரி ஹெலன்சாய்ஸ் தலைமையில்வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து வந்த காரை சோதனையிட்ட போது காரின் சீட்டுக்கு பின் பகுதியில் ட்ராவல்ஸ் பேக்கில் செயின், வளையல், கோல்ட் காயின் என மொத்தம் 8.750 கிராம் தங்க நகை இருந்தது.

இதனை எந்தவித ஆதாரமும் இன்றி எடுத்து செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்பு பாபநாசம் வட்டாட்சியர் முருகவேலிடம் ஒப்படைத்தனர்.

ஆய்வின்போது சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம், காவலர்கள் கோபி, ஜெயபிரகாஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

தஞ்சை மாவட்டம் பாபநாசம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட களஞ்சேரி வெண்ணாற்று பாலம் அருகில் பறக்கும் படையினர் இரவு நேர வாகன சோதனையில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது பஸ் நிறுத்தம் அருகில், ஒரு வெள்ளை நிற சாக்கு பை மற்றும் கட்டை பையில் 72 மதுபான பாட்டில்கள் கேட்பாரற்று கிடந்தது.

பின்னர் 72 மதுபான பாட்டில்களையும் கைப்பற்றி அம்மாபேட்டை, இன்ஸ்பெக்டரிடம் ஒப்ப டைக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட மதுபாட்டில்களின் மதிப்பு ரூ.8640 ஆகும்.

Tags:    

Similar News