செய்திகள்
எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம்

அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியலை 8-ந்தேதி வெளியிட திட்டம்

Published On 2021-03-02 06:35 GMT   |   Update On 2021-03-02 06:35 GMT
கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை இறுதி செய்துவிட்டு விரைவில் வேட்பாளர் பட்டியலை வெளியிடும் பணியில் அ.தி.மு.க. இறங்கியுள்ளது.
சென்னை:

தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் 6-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா, பா.ம.க., தே.மு.தி.க., த.மா.கா. உள்ளிட்ட கட்சிகள் இடம்பெறுகின்றன.

கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்தும் தேர்தல் அறிக்கை தொடர்பாகவும் நேற்று அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆலோசனை நடத்தினார்கள்.

பா.ம.க.வுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பா.ஜனதா, தே.மு.தி.க., த.மா.கா. மற்றும் சிறு, சிறு கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும்.

இதற்கிடையே கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை இறுதி செய்துவிட்டு விரைவில் வேட்பாளர் பட்டியலை வெளியிடும் பணியில் அ.தி.மு.க. இறங்கியுள்ளது. அ.தி.மு.க.வில் தற்போது விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. இதையடுத்து 4-ந்தேதி நேர்காணல் நடத்தி வருகிற 8-ந்தேதி வேட்பாளர் பட்டியலை வெளியிட அ.தி.மு.க. திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
Tags:    

Similar News