செய்திகள்
பா.ஜ.க. தலைவர் எல்.முருகன்

அதிமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை - பாஜக தலைவர் எல்.முருகன்

Published On 2021-03-01 22:42 GMT   |   Update On 2021-03-01 22:42 GMT
அ.தி.மு.க.வுடன் நடந்து வரும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் எவ்வித இழுபறியும் இல்லை என தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் கூறினார்.
சென்னை:

சென்னை தியாகராய நகரில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் மாநில தலைவர் எல்.முருகன் தலைமையில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி எம்.விஜயகுமார் பா.ஜ.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார். அவருக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. அதன்பின், பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அ.தி.மு.க. தலைமையுடன் பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளோம். இதில் எந்த ஒரு இழுபறியும் கிடையாது. எத்தனை தொகுதிகளில் போட்டியிடுகிறோம் என்பது குறித்து ஓரிரு நாட்களில் முறையாக அறிவிப்போம்.
சட்டசபையில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் இரட்டை இலக்க எண்ணிக்கையில் இருப்பார்கள்.

அ.தி.மு.க. கூட்டணியில் அ.ம.மு.க. இணைய வேண்டும் என்று பா.ஜ.க. தலைமை ஒன்றும் கூறவில்லை. இணைவது குறித்து நான் எதுவும் கூற முடியாது. அவர்கள் விருப்பம், முடிவு செய்து அறிவிக்கட்டும்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு நிரந்தரம் கிடையாது என்பதால் தேர்தலில் இது எந்தவகையிலும் பாதிக்காது. 2019-ம் ஆண்டில் போடப்பட்ட கூட்டணி தற்போது தொடர்கிறது என தெரிவித்தார்.
Tags:    

Similar News