செய்திகள்
மனிதநேய மக்கள் கட்சி

திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு

Published On 2021-03-01 13:16 GMT   |   Update On 2021-03-01 14:12 GMT
திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் இடம் பிடித்துள்ள கட்சிகளுடன் தொகுதி ஒதுக்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. டி.ஆர். பாலு தலைமையிலான குழு நேற்று முதற்கட்டமாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு எட்டப்படவில்லை.

இன்று 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது மனிதநேய மக்கள் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தத்தில் ஜவாஹிருல்லா- மு.க. ஸ்டாலின் கையெழுத்திட்டனர். இந்த சின்னத்தில் போட்டி, எந்தெந்த தொகுதி என்பது பின்னர் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்கப்படும் என ஜவாஹிருல்லா தெரிவித்தார்.

முன்னதாக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதற்கான தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தத்தில் மு.க.ஸ்டாலின் - காதர் மொய்தீன் கையெழுத்திட்டனர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தனிச்சின்னத்தில் போட்டியிடும்.
Tags:    

Similar News