2020-21ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் ராணுவத்திற்கு 3.37 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
மத்திய பட்ஜெட் 2020-21 - பாதுகாப்புத்துறைக்கு ரூ.3.37 லட்சம் கோடி ஒதுக்கீடு
பதிவு: பிப்ரவரி 01, 2020 18:30
கோப்பு படம்
புதுடெல்லி:
2020-21 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதித்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். இதில் தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியானது.
இந்த பட்ஜெட்டில் பாதுகாப்புத்துறைக்கு 3.37 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்புத்துறைக்கு ஒதுக்கப்பட்ட இந்த தொகையில் புதிய ஆயுதங்கள், போர் விமானங்கள், போர் கப்பல்கள் உள்ளிட்ட கொள்முதல்களுக்கு 1.13 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், சம்பளம், பராமரிப்பு மற்றும் இதர செலவுகளுக்கு 2.09 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், பாதுகாப்புத்துறையில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வுதியத்திற்கு 1.33 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனால் பாதுகாப்புத்துறைக்கு மொத்தம் 4.7 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
Related Tags :