விளையாட்டு வீரர்களின் மேம்பாட்டிற்காக தேசிய விளையாட்டு கல்வி வாரியம் அமைக்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பொது பட்ஜெட்டில் உள்ள அம்சங்கள் வருமாறு:-
வெளிநாட்டு மாணவர்கள் இந்தியாவில் கல்வி பயிலுவதை ஊக்குவிக்க ‘இந்தியாவில் பயிலுங்கள்’ திட்டம் தொடங்கப்படும். பிரதமரின் கவுசல் விகாஷ் யோஜனா திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படும். ‘விளையாடு இந்தியா’ திட்டம் விரிவுபடுத்தப்படும்.
எதிர்காலத்தில் ஏற்படும் தொழில்நுட்ப பணியாளர் பற்றாக்குறையை எதிர்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விளையாட்டு வீரர்களின் மேம்பாட்டிற்காக தேசிய விளையாட்டு கல்வி வாரியம் அமைக்கப்படும். நாடு முழுவதும் 4 தொழிலாளர் நீதிமன்றங்கள் உருவாக்கப்படும். ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வழிகாட்டுதல் வழங்க புதிய தொலைக்காட்சி சேவை தொடங்கப்படும். இந்த புதிய தொலைக்காட்சியும் ஸ்டார்ட் அப் நிறுவனமாகவே தொடங்கப்படும்.
இவ்வாறு பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.