ரெயில்வே பட்ஜெட் தனியாக தாக்கல் செய்யப்படும் முறை இல்லாத நிலையில், அந்த துறைக்கு பொது பட்ஜெட்டில் 1.48 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. #Budget2018 #UnionBudget2018 #Railway
2018-19-ம் நிதியாண்டிற்கான பொது பட்ஜெட்டை மத்திய நிதிமந்திரி அருண் ஜெட்லி மக்களவையில் இன்று தாக்கல் செய்தார். ரெயில்வே துறைக்கு தனி பட்ஜெட் இல்லாத நிலையில், பொதுபட்ஜெட்டில் அந்த துறைக்கு 1.48 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-
4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆளில்லா லெவல் கிராசிங்குகளில் பணியாளர்கள் நியமிக்கப்படுவர். ரெயில் நிலையங்கள் மற்றும் ரெயில்களில் சிசிடிவி பொருத்தும் பணிகள் விரைவுபடுத்தப்படும். ரெயில் தண்டவாளங்கள் பராமரிப்புக்கு கூடுதல் முக்கியத்துவம் தரப்படும்
18 ஆயிரம் கி.மீ. இரட்டை ரெயில்பாதைகள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 25 ஆயிரம் ரெயில் நிலையங்களில் நடைமேடைகளுக்கு பதிலாக எஸ்கலேட்டர் அமைக்கப்படும். பெரம்பூரில் அதிநவீன ரெயில்பெட்டிகள் தயாரிக்கும் ஆலை அமைக்கப்படும். எல்லா ரெயில் நிலையங்களிலும் வைஃபை வசதி ஏற்படுத்தப்படும்.
3,600 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரெயில்பாதைகள் சீரமைக்கப்படும். 2019-க்குள் 4 ஆயிரம் கி.மீ தொலைவுக்கு புதிய ரெயில் பாதைகள் அமைக்கப்படும். பெங்களூருவில் ரூ.17 ஆயிரம் கோடியில் புறநகர் ரெயில் சேவை ஏற்படுத்தப்படும். பணிமூட்டத்தால் விபத்துகள் ஏற்படுவதை தவிர்க்க சிறப்பு கருவிகள் அமைக்கப்படும். மும்பை மாநகர ரயில்வே வசதிகளுக்கு 11000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. #Budget2018 #UnionBudget2018 #Railway