2018-2019-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 29-ம் தேதி ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. அதன்பின்னர் பொருளாதார ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு பாராளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது. இன்று 2018-2019-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இதையொட்டி எம்.பி.க்களுக்கு வழங்குவதற்காக பட்ஜெட் நகல்கள் பலத்த பாதுகாப்புடன் பாராளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டன. பட்ஜெட்டுடன் தனது வீட்டில் இருந்து நிதி அமைச்சகத்திற்கு வந்த நிதி மந்திரி அருண் ஜெட்லி, பின்னர் அங்கிருந்து ஜனாதிபதி மாளிகை சென்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்தார்.
பின்னர் பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தனது குழுவினருடன் பாராளுமன்றத்திற்கு வந்தார். அதேசமயம் பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்கள், எம்.பி.க்கள் அனைவரும் பாராளுமன்றத்திற்கு வந்தனர்.
பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் முடிந்ததும் 11 மணிக்கு அருண் ஜெட்லி பாராளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். #Budget2018 #UnionBudget #tamilnews