மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் ரெயில்வே கட்டணம் உயருமா என்ற கேள்வி அடித்தட்டு மக்களிடையே எழுந்துள்ளது. #UnionBudget
ரெயில்வே கட்டணத்தில் உயர்வு இருக்குமா? நாளை தெரியும்
பதிவு: ஜனவரி 31, 2018 18:15
புதுடெல்லி:
பாராளுமன்றத்தில் 2018-19 ஆண்டுக்கான பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட இருக்கிறது. பொது பட்ஜெட்டுடன் ரெயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில், ரெயில்வே கட்டணம் உயர்த்தப்படுமா என்ற கேள்வி நாட்டின் அடித்தட்டு மக்களிடையே எழுந்துள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு கடைசி பட்ஜெட் இது என்பதால் பல்வேறு கவர்ச்சிகர அறிவிப்புகள் எதிர்பார்க்கப்படும் நிலையில், ரெயில்வே கட்டணங்களில் மாற்றம் செய்யப்படுமா என்ற குழப்பம் எழுந்துள்ளது.
முன்னதாக இந்தியாவில் ரெயில் கட்டணங்கள் உயர்த்தப்படுவதாக பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரின் போது தகவல்கள் வெளியானது, இத்தகவல்களை மத்திய ரெயில்வே துறை மறுத்து விட்டது.
இந்நிலையில் பொது பட்ஜெட்டில் ரெயில் கட்டணங்கள் உயர்த்தப்படுமா என்ற வகையில் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவில் இயக்கப்பட்டு வரும் பெரும்பாலான ரெயில்கள் குறிப்பிட்ட நேரம் தவறி தாமதமாக இயக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இத்துடன் ரெயில் கட்டணமும் உயர்த்தப்பட்டால் இவை மக்களுக்கு பெரும் சுமையாகவே இருக்கும்.